× Close

எதற்காக
இந்த
முன்னெடுப்பு?

நாமக்கல்லில் நாம் வசிக்கிறோம் என்பது எவ்வளவு உண்மையோ, "நம்ம ஊரு நாமக்கல்" எனும் உணர்வு நம்முள் வசிக்கிறது என்பதும் அவ்வளவு உண்மையே.

நாமக்கல்லுக்கு தான் எத்தனை தனிச்சிறப்புக்கள், இல்லையா?

தமிழ்நாட்டின்.. ஏன் தேசத்தின் முதன்மை அறிவுப் பாசறைகளில் ஒன்று!

நம் தன்னிகரற்ற தமிழ்நாட்டின் முட்டைத் தலைநகரம். தேசத்தின் ஜவுளி ஏற்றுமதியில் கணிசமான பங்கு வகிக்கும் மாவட்டம். கோழி வளர்ப்புத்துறையில் முன்னிலை. பேருந்து/சரக்குந்து மற்றும் பல்வேறு வகையான வண்டிகள் கட்டமைப்புத் துறையில் பெரும் பாய்ச்சல் நிகழ்த்திக் கொண்டிருக்கும் மாவட்டம். அனைவரையும் கவரும் கொல்லிமலை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம் என்பதால் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா மையம். அன்னை காவேரியின் அரவணைப்பில் தொன்றுதொட்டே செழித்து வளரும் உழவுத் தொழில்.

ஜவ்வரிசி என்றால் நாமக்கல், கைத்தறி என்றால் நாமக்கல்; இராசிபுரம் நெய்யின் மணமோ, உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. இத்தனை சிறப்பும் வளர்ச்சி அம்சங்களும் ஒன்றிணையும் ஒரே இடம், நமது நாமக்கல் தான்.

இவ்வளவு சிறப்புக்கள் நிறைந்து இருக்கும் நம் நாமக்கல்லை நாம்தானே கொண்டாட வேண்டும்?!

அதற்குத்தான் இந்த "நிகரில்லா நாமக்கல்" எனும் முயற்சி. நம் அடையாளத்தை உணர்ந்து, அதன் பெருமையை உலகுக்கு உரக்கச் சொல்லும் முயற்சி. இதைத் தொடங்குவது மட்டுமே நாங்கள். இதைத் தொடர்வது, வெற்றி அடையச் செய்யப்போவது - நாம் அனைவரும்.

வாருங்கள் நிகரில்லா நாமக்கல் என்னும் இந்த சிறிய முயற்சியை அனைவருக்கும் உரிய வளர்ச்சியாக முன் நின்று நடத்திடுவோம்.



பரிசளிப்பு விழா 02.03.2024